Search Your Lines/Poems Here

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு மடல் - 2017

மலர்ந்ததே மீண்டுமொரு புத்தாண்டு

வருடமும் வருபவள் நீ...
வருத்தங்கள் பல தந்தும்,
மகிழ்ச்சிகளை தர தவறவில்லை.
இன்னல்லகள் சில இட்டுனும்,
இன்பங்களை காட்ட தவறவில்லை.
பிரிவுகளை பார்க்கவைத்தாய்,
சில உறவுகளை நீ கொடுத்தாய்.
சரிவுகள் வந்தபோதும்
சந்திக்க மன பலம் கொடுத்தாய்.
இவை மேலும் தொடர
உன் கருணைக்கு நன்றி..
உன் அன்புக்கு நன்றி..

- சத்தியா

வியாழன், 15 டிசம்பர், 2016

காதல் மொழி பேசும் விழிகள்

சல சல மொழி பேசும் நீரோடை..
இசை மொழி பேசும் குயில்..
தென்றல் மொழி பேசும் காற்று..
மணம் மொழி வீசும் மலர்கள்..
ரீங்கார மொழி பேசும் தேனீக்கள்..
இவை அனைத்தும் மொழி மறக்கும், நம் விழி பேசும் மொழி கேட்டால்..

--சத்தியா

Kadhal Mozhi Pesum Vizhigal

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அனுபவ ஆசிரியர் கற்றுத்தந்த பாடம்


 கொடுக்கின்றபோதே பெற்றுக்கொள்

 கிடைக்கின்ற போதே ஏற்றுக்கொள்

 வலிக்கின்ற போதே விட்டுச்செல் 

 இழுத்து புடித்தால் அறுந்து விழுவாய்

 இசைந்து கொடுத்தால் அழுதுதுடுப்பாய்

  உன் துயரக்கண்ணீர் துடைக்க ஓடிவரும் கால்கள் இங்கில்லை

  அதை புரிந்து கொள்ளாது எதிர்பார்த்து மாழ்வது சரியுமில்லை

                                                                                                                      - சத்தியா