Search Your Lines/Poems Here

சனி, 1 ஜூலை, 2017

நேசிக்கிறேன் முழுதாய் உன்னை


நாட்கள் நீண்டினும் என்னுடன் நடை போடும் உன் கால்களை நேசிக்கிறேன்...

நேரம் இன்றினும் என்னுடன் உரையாடும் உன் குரலை நேசிக்கிறேன்...

கோபம் இருந்தினும் அதை கொட்டாத உன் குணத்தை நேசிக்கிறேன்...

சோகம் இருந்தினும் அதை நேரத்தில் சொல்லிடும் உன் மனதை நேசிக்கிறேன்..

யாரும் இன்றினும் துணையாய் இருக்கும் உன் நட்பை நேசிக்கிறேன்...

-நேசமுடன் சத்தியா

Nesikiren Muzhuthai Unnai - Tamil Kavithai
Nesikiren Muzhuthai Unnai



Nesikiren Muzhuthai Unnai


Naatkal Neendinum Ennudan Nadai Podum Un Kazhkalai Nesikiren..

Neram Indrinum Ennudan Uraiyadum Un Kuralai Nesikiren..

Kobham Irunthinum Athai Kottatha Un Gunathai Nesikiren..

Sogam Irunthinum Athai Nerathil Solidum Un Manathai Nesikiren..

Yarum Indrinum Thunaiyaga Irukum Un Natpai Nesikiren

-Nesamudan Sathiya

சனி, 18 பிப்ரவரி, 2017

 கவிதைகள்  பேசுகிறேன் தனிமையில்

கவிதைகள் பேசிவந்தேன், கேற்கும் காதுகள் அருகில் உண்டு.
மொழிகளை மறந்திங்கு மௌன வீணை மீட்டுகிறேன்.
துன்பமெனில் தூற்றுவதும், இன்பமெனில் போற்றுவது மானிட குணம்.
அது நடபத்திங்கு உணராமல் நாளும் புலம்பல் தினம் தினம்.

--சத்தியா..                                                                      


Kavithaigal Pesigiren Thanimaiyil


Kavithaigal Pesivanthen Ketkum Kaathugal Arugil Undu
Mozhigalai Maranthingu Mouna Veenai Eetinen
Thunbamenil Thootruvathum Inbamenil Potruvathu Maanida Gunam
Athu Nadapathingu Unaramal nalum pulumbinen dinam dinam..

--Sathiya..                                   


                                                       http://www.mytamilkavithaigal.blogspot.in





திங்கள், 9 ஜனவரி, 2017

களம் தாண்டும் நம் காளைகள் - ஜல்லிக்கட்டு

 களம் தாண்டும் நம் காளைகள் 
களம் தாண்டி நிலம் தொடும் எம் காளைகள், 
நாம் திமில் பிடித்து ஓட்டம் எடுத்து புழுகி பறக்க உருளுவது விளையாட்டல்ல ,
    அது நம் கலாச்சாரம்.
நாம் ஏர் பிடித்து நிலம் மிதித்து உழுவது வியாபாரமல்ல
    அது நம் பாரம்பரியம்,
தமிழனே இது நம் ஜல்லிக்கட்டு , அதற்கு நீ மல்லுக்கட்டு 
--சத்தியா..